Thursday, October 3, 2013

புத்தரின் வருகைக்கு முன்னர் இலங்கையில் இயக்கர், நாகர், தேவர் ஆகிய பழங்குடி மக்கள் வாழ்ந்துள்ளார்கள்-நக்கீரன் (பாகம் 4)

Thangavel
இரண்டாம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட திவ்வியவதன என்ற பவுத்த நூல்  இலங்கையை தம்பபாணி எனக் குறிப்பிடுகிறது. அந்த நூல் வணிகன்  ஒருவனது மகன்  இலங்கையில் இயக்கிகளைக் கண்டதாகக் குறிப்பிடுகிறது.   மேற்குறிப்பிட்ட கதைகள் விஜயன் – குவேனி கதைக்கு  வித்திட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர் ஜி.சி. மென்டிஸ் தான் எழுதிய வுhந நுயசடல ர்ளைவழசல ழக ஊநலடழn  என்ற நூலில் (அத்தியாயம் 3)    குறிப்பிடுகிறார்.
இராமாயணத்தில் இலங்கை லங்காதுபீபம் (டுயமெயனறநநிய) என அழைக்கப்பட்டது. தீப என்றால் தீவு என்று பொருள்.  சாவகர் (துயஎயநௌந) யுடநபெமழ   என்று அழைத்தார்கள். இதன் பொருள் இராவணனது இராச்சியம் என்பதாகும்.  மகா அலெக்சான்டர் காலத்தில் இலங்கை வுயிசழடியநெ  என அழைக்கப்பட்டது. பின்னர் தம்பபார்ணி (வுயஅடியியசni) என்று அழைத்தார்கள். தம்பபார்ணி என்பது தாமரபரணி என்பதன் சிதைவாகும். கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொலமி  ளுயடயi  என மக்களையும்  ளுயடமைந என நாட்டையும் குறிப்பிட்டார். அரேபியர் செறன்டிப் என அழைத்தனர்.
பழந்தமிழ் இலக்கியங்களில் இலங்கை  ஈழம் என அழைக்கப்பட்டது.  ‘ஈழத்துணவு’இ ‘ஈழத்துப் பூதன்தேவனார்’ போன்ற சொற்கள்  இலங்கைத் தீவின் தொடர்புகளைக் காட்டி நிற்கின்றன. மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் பாடிய ஏழு பாடல்கள் நற்றிணைஇ குறுந்தொகைஇ அகநானூறு ஆகிய சங்க நூல்களில் காணப்படுகின்றன.
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கடற்பகுதிஇ அன்று நிலப்பகுதியாக இருந்தகாலத்தில்இ அந்த நிலத்தை ஊடறுத்து இலங்கையில் உள்ள புத்தளம்வரை தமிழகத்திலுள்ள தாமிரபரணி ஆறு பாய்ந்திருக்க வேண்டும். இலங்கையில் விஜயன் வந்திறங்கியதாகக் கூறப்படும் புத்தளத்திற்கருகே உள்ள பகுதிதான் தப்ரபனே என்று பல வரலாற்றறிஞர்கள் கருதுகிறார்கள். விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடம் தம்பபாணி என்று மகா வம்சம் கூறுகின்றது (6:47).
இலங்கை  தமிழர்களின் பூர்வீக தாயகம் என்பதை மகாவம்சம் மறைக்க முயன்றாலும் வரலாற்றுச் சான்றுகளும் பழந்தமிழ் இலக்கியங்களும் அதனை மறுக்கின்றன.   இராமாயணம் இலங்கை இயக்கர்கள் வாழ்ந்த நாடு என்றும் அதனை இராவணன் ஆண்டான் என்றும் செப்புகிறது.
மகாவம்சத்தில் பதினைந்தாவது அத்தியாயமான ‘மகா விகாரை’ யிலும்இ ‘புத்தர் வருகை’ எனும் முதல் அத்தியாயத்திலும் புத்தர் இலங்கைக்கு மும்முறை மேற்கொண்ட வருகைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. முதல் வருகையின் போது மகாநாகவனத்தில் (மஹியங்கனாவில்) வாழ்ந்த இயக்கர்களை (யக்கர்கள்) அங்கிருந்து விரட்டுவதற்காக சென்றார் எனவும் இரண்டாவது விஜயத்தின் போதுஇ நாகவம்ச அரசர்களான மகோதரனுக்கும் குலோதரனுக்கும் இடையில் மூண்ட போரைத் தீர்த்துவைப்பதற்காக நாகவீபத்திற்குச் சென்றாரெனவும் (நாகர்களை அடக்கினார் எனவும்) மூன்றாவது வருகையின் போதுஇ நாக மன்னன் மணியக்கியன் அழைப்பின் பேரில் கல்யாணி நாட்டிற்குச் சென்றார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மகாவம்சம் ‘புத்தர் வருகை’ எனும் முதல் அத்தியாயத்தில் மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன.
அவர்  ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில் பூச நட்சத்திரம் பௌர்ணமியன்று இலங்கையை புனிதப்படுத்தும் நோக்கோடு புத்தர்  புறப்பட்டார்.
புத்தரின் முதலாவது வருகை
தமது மார்க்கம் பிற்காலத்தில் போற்றிப் புகழுடன் திகழப் போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்போதே தெரிந்திருந்தது. அப்போது இலங்கையில் இயக்கர்கள் (லுயமமாயள)  நிரம்பியிருந்தனர். அவர்களை அங்கிருந்து முதலில் விரட்ட வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்.
இலங்கையின் மத்தியில் அழகிய நதிக் கரையில் இயக்கர்கள் வழக்கமாக ஒன்றுகூடும் இடம் உள்ளது என்பதும் அவருக்குத் தெரியும்.  ஒரு  குறிப்பிட்ட நாளில்  ஒரு நதியின் அருகே  மூன்று யோசனை நீளமும் ஒரு யோசனை அகலமும் உள்ள  மகாநாக வனம்    இயக்கர்களது ஒன்றுகூடல் இடமாக இருந்தது. இயக்கர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.
அப்போது இயக்கர்களின் ஒன்றுகூடல் கூட்டத்துக்கு  புத்தர் சென்றார். அங்கு கூடியிருந்த கூட்டத்தின் நடுவில்  அவர்களுடைய தலைக்கு மேலாகஇ பிற்காலத்தில் மஹியங்கான ஸ்தூபி  அமைந்த இடத்தில்இ  அவர் வானத்தில் அந்தரத்தில் நின்றார். அப்போது அவர் இயக்கர்கள் மத்தியில் பேய்மழைஇ புயல்இ இருள் ஆகியவற்றைத் தோற்றுவித்து அவர்கள் மத்தியில்  திகிலை உருவாக்கினார்.  திகிலடைந்து போன இயக்கர்கள் புத்தரை வணங்கித் தங்களை அந்தத் திகிலில் இருந்து விடுவிக்கக் கோரினர்.  ‘நான் உங்களை திகிலில் இருந்து விடுவிப்பேன் அதற்கு முதல் உங்கள் முழு சம்மதத்துடன் இங்கே நான் உட்காருவதற்கு ஓர் இடம் கொடுங்கள்’ என்று கேட்டார். இயக்கர்கள்இ ‘இறைவனே  இந்தத்  தீவு முழுவதையும் உங்களுக்குக் கையளிக்கிறோம். எங்களை இந்தத் திகிலில் இருந்து  காப்பாற்றி  ஆறுதல் அளியுங்கள்’ என்று கூறினார்கள். புத்தர் அவர்களது திகிலைப் போக்கி அருளினார்.
புத்தர்இ கிரி என்ற அழகான சிறு தீவை வரவழைத்து  இயக்கர்களை அவர்கள் வாழ்ந்த இடத்திலிருந்து கிரித் தீவிற்கு  அனுப்பி வைத்தார்.  இதன் பின்னர்இ தேவர்கள் கூட்டத்தில் புத்தர் தமது தர்மத்தைப் போதித்தார். கோடிக்கணக்கான  உயிரினங்கள் மதம் மாறி நிர்வாண நிலை பெற்றனர்.  சுமனகூடத்தில் வாழ்ந்து வந்த சுமன என்ற தேவர் தலைவனுக்குத் தனது தலை முடியில் ஒரு பிடி மயிரைப் புடுங்கி அவன் கையில் கொடுத்தார்.
புத்தரின் இரண்டாவது வருகை
புத்தரின் இலங்கைக்கான இரண்டாவது வருகை நாகவம்ச அரசர்களான மகோதரனுக்கும் குலோதரனுக்கும் இடையில் மூண்ட போரைத் தீர்த்துவைப்பதற்காக நாகவீபத்திற்குச் சென்றாரெனவும் (நாகர்களை அடக்கினார் எனவும்) சொல்லப்படுகிறது.
இந்த இரண்டாவது வருகை புத்தர் ஞானமடைந்து 5 ஆண்டுகள் கழிந்த பின்னர் இடம்பெற்றது. யெத்தா என்னும் வனத்தில் தங்கியிருந்த புத்தர் மணிகள் பொருந்திய அரியணைக்காக மாமன் முறையான மகோதரனும் மருமகன் முறையான குலோதரனும்  தங்கள் படைகளோடு மோதிக்கொள்ள இருந்ததைப் பார்த்து  அவர்கள் மீது கருணை கொண்டு சித்திரை மாதம் பவுர்ணமி நாள்  விடி காலையில் தனது பிச்சா பாத்திரம் அங்கிகள் சகிதம் நாகதீபத்திற்குப் பயணமானர். நாகதீபம் நாற்புறமும் கடலால் சூழப்பட்டு 500 யோசனை தூரம் நீடித்திருந்தது.
நாகதீபத்தை ஆண்ட  மகோதரன் என்ற அரசன் தெய்வீக ஆற்றல் படைத்தவனாக இருந்தான். அவனது இளைய சகோதரியை (கிடபிக்கா)  கந்தவட்டமான மலையை ஆண்ட நாக  அரசனுக்கு மணம் முடித்து வைத்தான். அவர்களுக்கு குடோதரன் என்ற மகன் பிறந்தான்.குலோதரனின் பாட்டி மணியாசனம் ஒன்றை  குதோதரனது  தாயாருக்கு கொடுத்துவிட்டு இறந்து விடுகிறாள்.
இப்போது நாகதீபத்தை ஆண்ட மகோதரன் மலையராட்டிர அரசனான குலோதரன் மீது மணியாசனத்தைக் கைப்பற்றப்  பெரும்  போர் தொடுக்க ஆயத்தமாகிறான். இவர்கள் இருவரும் மாமனும் மருமகனுமாவர். இரு படைகளுக்கும் இடையில் கடுமையான போர் தொடங்க இருந்த போது புத்தர் நடுவானில் எழுந்து நாகர்களைப் பேயிருளில் ஆழ்த்துகிறார். அஞ்சிய நாகர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதற்குச் செவி சாய்த்த புத்தர்  மீண்டும்  அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் புத்தரை வணங்கிப் போருக்குக் காரணமான மணியாசத்தில் புத்தரையே அமரச்செய்தனர்.  பின்னர் புத்தருக்கு  விண்ணக உணவும்  பானமும் கொடுத்து நாக அரசர்கள் உபசரித்தார்கள்.  புத்தர் 80 கோடி நாகர்களை புத்தசமயத்தை போதித்து முக்தி அடைய வைத்தார்.
இந்தக் கதைகள் சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரேஇ ஈழத்தில் நாகர்கள் சிறப்புற ஆட்சி செலுத்தி வந்ததை  மகாவம்சம் உறுதிசெய்கிறது. இதே கதையை 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மணிமேகலை காப்பியமும் கூறுகிறது.
வேக வெந்திறல் நாகநாட்டரசர்
சினமாசு ஒழித்துஇ மனமாசு தீர்த்தாங்குஇ
அறச்செவி திறந்துஇ மறச்செவிஅடைத்துப்
பிறவிப்பணி மருத்துவன் இருந்தறம் உரைக்கும்.  ((9:58- 61) )
மகாவம்சம் குறிப்பிடும் நாகநாடு இன்றைய நயினாதீவு அல்ல. அந்த நாகநாடு 500 யோசனைக்குப் (ஒரு யோசன 10 மைல்) பரந்திருந்தது என்று மகாவம்சம் கூறுகின்றது. (1:48) (தொடரும்)

No comments:

Post a Comment