Thursday, October 3, 2013

தேவிக்கு!!

இன்று என் இதயத்தில் குடைந்து கொண்டிருக்கும் கேள்விக்கு 
காரணமான தேவிக்கு,
என் நித்திரை போனது சில மாதமாய்,அது உங்கள் பிரசனை என்பீர்,உண்மைதான் 
அதன் காரணம் தம் கோபம் என்பதால் அதை எண்ணிஎண்ணி இன்று உன் நினைவில் 
வருந்துமளவுக்குரோட்டில் பைத்தியமாய் அலையும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.

மனைவியாக  நினைப்பவளை வேசி என்று சொல்வதற்கு மனத்துக்கு முடிவதில்லை,அப்படிச்சொன்னவர்களை கூட  மன்னித்து உறவாடுபவர் இவனை மட்டும் வெறுப்பதுதான் புரியவில்லை.

சொல்லாதே என்றபடியால் மறைத்தவற்றை எல்லோருக்கும் சொன்னீர்களே!ஏன் இந்த கோபம்??
நான் செய்த குற்றம் ஒன்றே!காருக்கு கொடுத்த காசை பங்கில் போட்ட காசு என்றெண்ணி பேசியதுதான்.ஆனாலும் அழைப்பீர்கள் என்று காத்திருந்தேன்,
அழைத்தீர்கள் உங்கள் படத்துக்காக.வரவா என்றதற்கு அழைக்கவுமில்லை,வந்தால் தடுக்கவுமில்லை என்று சொன்னவர் மறுத்ததும் வந்தபோது தடுத்ததும் என்னை
 மட்டுமே!!இன்றும் வாசலில் காத்திருக்கிறேன் அழைப்பீர்கள் என்ற நம்பிக்கையில்,
உங்களில் உள்ள உயர் அபிப்பிராயத்தில்!
குறுந்தகவல் போட்டால் பதிலில்லை,தொலைபேசி எடுப்பதில்லை.
பத்தாம் திகதியிலிருந்து தொலைபேசியும் நின்றுபோனது. காதலை கேட்க நினைத்த மனம் இன்று காரணம் கேட்டு தவிக்கிறது!

வாழை இலையிலிருந்து பன்னிரண்டுமணி வரை வந்தவருக்கெல்லாம் சொன்னவரே வாழ்க்கைத் துணையாகத்தானே வரம் கேட்டேன்.
முடியாவிட்டால்  நட்பை கேட்டேன்.

என்னை விட சிறந்த வரன் கிடைக்குமென்றால் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி படங்களை நினைவாக்கி,வீடியோவில் குரல் கேட்டு வாழ்ந்து விடுவேன்.வெறுப்பதை மட்டும் தாங்க முடியவில்லை.எத்தனை பெண்களை கடந்திருப்பேன்,அவர்களிடம் செல்லாத மனம் உன்னிடம் வந்தது நான் செய்த
பாவமா என்பது உனது  பதிலில் உள்ளது.பிரிவு வேண்டாமென்று பிரிவை சொல்லி தொடர்பு  கொண்டேன்.இன்னும் பதில் இல்லை.
மௌனம் சம்மதம் என்பார்கள். உன் மௌனமும் அப்படித்தானே!!பதில் இல்லை என்றால் அப்படித்தான் எடுப்பேன்கட்டலாமா??உம்மிடம் நான் காதலை கேட்கவில்லை.கழுத்தை கேட்கின்றேன்.
குறைகளை கூறின் நிறைவாக்க முயற்சிக்கிறேன்.பேசாது மட்டும் இருக்கவேண்டாமே!!பெண்களை தெய்வத்துக்கு ஒப்பிடுவர்,பேய் கூட இரங்கும் பெண்ணை கண்டால்!
தெய்வத்திடம் நான் கேட்கும் வரம் என்னிடம் பேசு என்பதே!!
என் இதயத்தை நோகடிக்கதே,ஏனெனில் அங்கு வாழும் என் தேவிக்கு வலிக்கும்!!
என்றும் புன்னகையுடன் என் முன் நீ வாழ்ந்தால் அது போதும் எனக்கு!!

No comments:

Post a Comment